Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிவிகே பவர் நிகர இழப்பு 109 கோடி ரூபாய்

 

 

ஜிவிகே பவர் அண்ட் இன்ஃராஸ்டிரக்சர்ஸ் நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 235 கோடி ரூபாயாக இருந்த நிகர இழப்பு 2014 -15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 109 கோடி ரூபாயாக

உள்ளது. கடந்த பதினான்கு காலாண்டுகளாக இந்த நிறுவனம் தொடர்ச்சியாக நிகர இழப்பையே சந்தித்து வருகிறது 

2013 -14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 716 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 2014 -15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 865.5 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
2013-14ம் நிதி ஆண்டில் 369 கோடி ரூபாயாக இருந்த நிகர இழப்பு 2014-15 ம் நிதி ஆண்டில் 835 கோடி ரூபாயாக உள்ளது. 
2013-14 ம் நிதி ஆண்டில் 2821 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த நிகர வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டில் 3050 கோடி ரூபாயாக உள்ளது 


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP