Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காபிக்குள் ஒளிந்திருக்கும் ஹாக்கர்கள்!

முன்பெல்லாம் ஹாக்கர்கள் கணினி மூலம் வங்கி கணக்குகளை திருடுவார்கள். சிலர் முக்கியமான ஆவணங்கள், ரகசிய தகவல்கள் ஆகியவற்றை ஹாக் செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். இந்த முறை ஹாக்கர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் சற்று வித்தியாசமானது. அவை தான் இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள்.
 
ஆப்ஸ்களை பயன்படுத்தி சமீபத்தில் பணத்தை பறி கொடுத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. உலகின் பிரபலமான காபி ஷாப்களில் ஒன்றான ஸ்டார்பக்ஸின் ஆப்ஸில் நுழைந்து கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை திருடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் செல்போனில் வங்கி கணக்கு மற்றும் கார்டு விவரங்கள் பதியப்பட்டுள்ளதே என்கின்றனர் நிபுணர்கள். மொபைல் போன்  மூலம் பயன்படுத்துபவர்கள் கணக்கு தான் அதிகம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதற்கு பதிலளித்துள்ள ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் இதற்கு காரணம் ஆப்ஸ் அல்ல. வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் வலிமையற்ற பாஸ்வேர்டுகளே என கூறியுள்ளது. மேலும் ஆப்ஸ் மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.தங்கள் கணக்கு ஹாக் செய்ய பட்டிருக்குமோ என்ற பயம் இருந்தால் ஆப்ஸுக்கான பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படியும் கூறியுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ