Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்கேட் பாமோலிவ்: நிகரலாபம் 23% அதிகரிப்பு!

கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் நான்காம் கலாண்டு முடிவினை வெளியிட்டிருக்கிறது. இதில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 23.7% அதிகரித்து 163.6 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 132.3 கோடியாக இருந்தது. அதே போல நிறுவனத்தின் வருமானமும் வளர்ச்சிப்பாதையில் காணப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டின் மார்ச் காலாண்டு முடிவின்படி வருமானம் 11% அதிகரித்து 1,028.5 கோடி ரூபாயாக காணப்படுகிறது. இது இதற்கு முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டின் இதே காலண்டில் 927.3 கோடி ரூபாயாக இருந்தது. இன்று இந்திய பங்குச்சந்தை இறக்கத்தில் தொடங்கி வர்த்தகமாகும் இந்த நேரத்தில் கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 27 ரூபாய் அதிகரித்து 2099.50 என்கிற நிலையில் (10.22 மணி நிலவரம்) காணப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ