Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் மொபைல்போன் விற்பனை சரிவு!

பல ஆண்டுகளாக இந்தியாவில் மொபைல் போன் விற்பனையானது மிக வேகமாக அதிகரித்து காணப்பட்டது. ஆனால் கடந்த 2014-15-ம் நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத நிலவரப்படி 5.3 கோடி மொபைல்போன்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன எனவும், இது இதற்கு முந்தைய அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 6.2 கோடியாக அதிகரித்து காணப்பட்டது எனவும் சைபர் மீடியா ஆய்வு நிறுவனமானது தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மொபைல் விற்பனை 14.5% சரிவடைந்துள்ளதை குறிக்கிறது. கடந்த 20 ஆண்டு மொபைல் விற்பனையில் இதுவே முதல் சரிவாகும் என மொபைல் விற்பனை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 7.14 சதவிகிதமும், சாதாரண போன்களின் விற்பனை 18.3 சதவிகிதமும் சரிவடைந்துள்ளன. வரி  பிரச்னைகள், போட்டி அதிகரிப்பு போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, பல புதிய மாடல்  மொபைல்களும், புதிய பிராண்டுகளில் கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த வகை மொபைல்கள், மொபைல் பிரியர்களை ஈர்க்காதபடி இருந்ததும் நான்காம் காலாண்டில் விற்பனை சரிவடைந்ததற்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ