Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் நிகர லாபம் ரூ.301 கோடியாக உயர்வு..!

 யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ்  நிகர  லாபம் ரூ.301 கோடியாக உயர்வு..! 

யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ் நிறுவனம், அதன் 2014 – 15 நிதி ஆண்டு கணக்குகளை 15 மே 2015 அன்று இறுதி செய்துள்ளது.  இந்த நிறுவனம் ரூ.10,692 கோடிகள் மதிப்பிலான ப்ரீமியத்தை நிறைவு செய்து, 10 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  நிறுவனத்தின் வளர்ச்சி செயல்திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், ஆரோக்கியக் காப்பீடு 19 சதவிகிதமும், வாகனக் காப்பீடு 12 சதவிகிதமும் மற்றும் தீ விபத்து காப்பீடு 5 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது. 
முகவாண்மை பிரிவு இந்த ஆண்டு 13 சதவிகிதம் வளர்ச்சியடைந்து ரூ.867  கோடிகளை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு நிறுவனம் 7683 முகவர்களை நியமித்துள்ளது மற்றும் முகவாண்மை பலத்தை நடப்பு ஆண்டில் 82,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் பேங்காஷூரன்ஸ் பிரிவும்  வளர்ச்சியடைந்து 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டிற்கான வரிக்குப் பிந்தைய லாபமாக ( PAT)  நிறுவனம் ரூ.301 கோடிகளை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் முதலீட்டு வருவாயானது, கடந்த ஆண்டின் ரூ.1857 கோடிகளுடன் ஒப்பிடுகையில் 14 சதவிகிதம் உயர்ந்து ரூ.2126 கோடிகளாக அதிகரித்துள்ளது. 
யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ்  
தலைவர் மிலிந்த் காரத் 
 
நிறுவனத்தின் மொத்த முதலீட்டு வழங்குபட்டியலின் சந்தை மதிப்பானது ஆண்டின் இறுதியில் ரூ.25,385 கோடிகளாகவும் மற்றும் நிகர மதிப்பு கடந்த ஆண்டின் ரூ.5361 கோடிகளுடன் ஒப்பிடுகையில் ரூ.5,589 கோடிகளாக அதிகரித்து 4 சதவிகித உயர்வை பதிவு செய்துள்ளது
 
 நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ.12,345 கோடிகள் ப்ரீமியம்  இலக்கினை  அடைந்து 15 சதவிகித வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நட்பார்ந்த அம்சங்களுடன் நிறுவனம் இந்த ஆண்டு, ரிவைஸ்டு ஃபேமிலி மெடிகேர் பாலிசியை  அறிமுகம் செய்தது. வாகனங்கள் வழங்குபட்டியலில், “நில் டெப்ரிசியேஷன் வித்தவுட் எக்சஸ்”, “லாங் டெர்ம் லயபிளிட்டி ஃபார் டூ-வீலர்ஸ்” மற்றும் “ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்” ஆகிய பெயர்களில் புதிய ஆட்-ஆன் கவரை அறிமுகம் செய்துள்ளது.
         இந்த நிறுவனம் 8 சில்லறை காப்பீட்டு திட்டங்களுக்கு (வாகனம், ஆரோக்கியம், தனிநபர் விபத்து காப்பீடு, மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் செலவுக்கான பாலிசி,  ஹவுஸ் ஹோல்டர்கள், ஷாப்கீப்பர், பயிர் காப்பீடு மற்றும் மரைன் இன்ஷூரன்ஸ் ஓப்பன் கவர்) 1184 மோட்டர் டீலர்கள் மற்றும் 8301 முகவர்களுக்கு, ஆன்லைன் போர்டல்  வசதிகளை வழங்கியுள்ளது. இத்தகைய போர்டல்களின் வழியாக 25 லட்சங்களுக்கும் மேற்பட்ட பாலிசிகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
யுனைடெட் இந்தியா இன்ஷுரன்ஸ்  நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மிலிந்த் காரத் தெரிவித்துள்ளார். 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ