Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்செல் நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலை!

இன்றைய நிலையில் மொபைல் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களுக்குள் யார் தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல, சிறப்பான, வேகமான சேவைகளை முன்னதாக வழங்குகிறோம் என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 3ஜி அலைகற்றைகள் வழக்கத்தில் இருக்கும் இன்றைய நிலையில் இது போன்ற சூழ்நிலைகள் நிலவி வருகிறது. இனி வரும் நாட்களில் 4ஜி அலைகற்றைகள் அமலுக்கு வரும்போது ஆப்ரேட்டர்கள் தங்களின் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த அவரவர்களின் சேவைத்திறனையும் மேம்படுத்த நினைப்பார்கள். அப்போது அந்த வேலைகளை எடுத்துச் செய்வதற்கான பணியாட்கள் பலம் அவசியம் தேவைப்படும்.

இதை கருத்தில் கொண்டும், நெட்வொர்க் மற்றும் சில்லறை வணிகத்தை வலுப்படுத்துவதற்காகவும் ஏர்செல் நிறுவனம் நடப்பு ஆண்டில் 1,000 புதிய பணியாளர்களை எடுக்க முடிவு செய்திருக்கிறது. நன்கு படித்த, அறிவார்ந்த நபர்களை வேலைக்கு எடுக்கப் போவதாக ஏர்செல் நிறுவனத்தின் முதன்மை மனிதவள மேலாளர் சந்தீப் காந்தி தெரிவித்திருக்கிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ