Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அபார்ட்மென்ட் அட்டா : அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு..!

அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி சங்க மேலாண்மை வலைதளமான அபார்ட்மெண்ட் அட்டா தனது ‘அபார்ட்மெண்ட் அட்டா கணக்கியல் சேவைக் வலைப்பணி’ (ApartmentADDA Accounting Service Partner Network (AASPN)) சேவை குறித்த அறிவிப்பை  வெளியிட்டது. வீட்டு வசதி சங்கக் கணக்குகளை மேலாண்மை செய்யும் கணக்குத் தணிக்கையாளர்களுக்கும், கணக்கியல் நிபுணர்களுக்கும் உதவும் வகையில் அட்டா வலைதளத்திலிருந்து அறிமுகமாகும் இப்புதிய சேவை அவற்றை எளிமைப்படுத்தும். 
 
கணிக்கியல் நிபுணர்கள் வீட்டு வசதிச் சங்கக் கணக்கை வேகமாகவும், பிரச்சினை இல்லாமலும் மேலாண்மை செய்ய இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் எனில் மிகையில்லை. கணக்குகளின் நுண்ணிய தன்மையைக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், கணக்கியல் வல்லுனர்கள் அவற்றிற்குச் செலவழிக்கும் நேரமும் கணிசமாக மிச்சப்படும். இந்த மென்பொருள் குறைந்த விலையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
அபார்ட்மெண்ட் அட்டா.காம் சிஇஓ சான் பானர்ஜீ கூறுகையில் ‘ஆன்லைன் கணக்கியில் இன்றைக்கு ஆடம்பரமில்லை, அவசியமாகும். இந்தப் புதிய சேவை மூலம் பலவேறு நிலைகளிலுள்ள கணக்கியல் நிபுணர்கள் எங்களுடன் இணைந்து அனைத்து வீட்டு வசதி சங்கங்களின் கணக்குகளையும் எளிமையாக மேற்கொள்ளலாம். விவரப் பட்டியல், பணம் செலுத்தும் பல்வேறு கேட்வே (payment gateway) வழியே செலுத்துதல், தவணை செலுத்தத் தவறுபவர்களையும், செலவுகளையும் கண்காணித்தல், கணக்குத் தணிக்கைக்கு நிதி அறிக்கையைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆன்லைன் கணக்கியல் உதவும். இந்தியாவில் 350க்கும் அதிகமான வீட்டு வசதிச் சங்கங்கள் இந்தக் கணக்கியல் முறையைப் பயன்படுத்தி வருகின்றன. மும்பை மற்றும் பெங்களூரிலுள்ள எங்கள் குழு கணக்கியல் நிபுணர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. கணக்குப் பரிமாற்றங்களை வழக்கமான முறையிலும் எம்எஸ் எக்ஸெல் (MS Excel) மூலம் பதிவேற்றம் செய்யலாம். தரவுகள் அனைத்தும் பன்னாட்டு தரவு மையத்தில் பாதுகாப்பாக இருக்கும். ஆண்டு இறுதியில் நிதி அறிக்கை தயாரிக்கவும் உதவும்’ என்றார். 
 
முக்கிய அம்சங்கள்
 
* தாமதமாகப் பணம் செலுத்தியதற்கான வட்டி & சேவை வரி உள்பட 100% தானி விவரப் பட்டியல் 
* உறுப்பினர்களுக்கு மொத்தமாக மின் அஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் – விவரப் பட்டியல், வரவினம்  மற்றும் நினைவூட்டல்கள்..
 
* ஆன்லைன் வசூல் ஒருங்கிணைப்பு – வழக்கமான முறையில் பதிவுகள் தேவையில்லை
 
* எம்சிக்கான (Member Council) ஆயத்த ஆன்லைன் அறிக்கைகள் – கணக்காளர் பணியைக் குறைத்தல்
 
* வழக்கமான விவரப் பட்டியலுடன் தனியாகத் தற்காலிக விவரப் பட்டியல் 
 
* ஆண்டு நிதிக் கணக்கு முடிவிற்கான தானியக்கப் பதிவுகள்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ