Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜே எஸ் டபிள்யூ சிமென்ட்; ஜிஜிபிஎஸ் தொழில்நுட்பம் அறிமுகம்..!

 ஜே எஸ் டபிள்யூ சிமென்ட்; ஜிஜிபிஎஸ் தொழில்நுட்பம் அறிமுகம்..!


ஜே எஸ் டபிள்யூ நிறுவனம் குழும நிறுவனமான ஜே எஸ் டபிள்யூ சிமென்ட் நிறுவனம் ஜிஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தொழில்நுட்பம் குறித்து ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் சி இ ஓ மற்றும் இயக்குநர் அனில் குமார் பிள்ளை கூறுகையில் "உலகிலேயே இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் மிகப் பெரிய துறைகள் சிமெண்ட் மற்றும் திண்காரை.

சுற்றுசூழல் மாசுபடுவது மற்றும் இயற்கை ஆதாரங்கள் அழிவது குறித்து பொது மக்கள் அதிக கவலை கொள்வதால், சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் வகையில் கட்டுமானத் துறை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டன் போர்ட்லேண்ட் சிமெண்ட் மாற்றம் காரணமாக அகற்றப்படும் ஒரு டன் கரியமில வாயு மூலம் பசுமை வீடுகள் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஜிஜிபிஎஸ் உதவுகிறது. இயற்கையைக் காப்பாற்ற உதவும் இந்த முனைவு எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது" என்றார்.


கரியமில வாயு வெளியேற்ற அளவுகளைக் குறைக்கவும், சுண்ணாம்பு உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட் நிறுவனம் பசுமை வயல் மற்றும் அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்ப சிமெண்ட் உற்பத்தி அலகை ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பிலகலகுடுரு கிராமத்தில் நிறுவி உள்ளது. இயற்கை ஆதாரங்களைக் காப்பாற்ற, குழுமத்தின் எஃகு தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும் சிறுமணிபோல் அடர்த்தியுள்ள ஊதுலை சாம்பலைப் பயன்படுத்தி ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் ஜிஜிபிஎஸ் தயாரிக்கிறது. இதன் மூலமாக தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP