Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2015 : பணியாளர் சம்பளம் இரட்டை இலக்கத்தில் உயரும்..!

 2015 : பணியாளர் சம்பளம் இரட்டை இலக்கத்தில் உயரும்..!

 

திறமையாக வேலை செய்வதற்கான ஆட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த வருடத்தில் நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் பணியாற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் சம்பளம் 10 சதவிகிதத்திற்கும் மேலாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. .அதே நேரத்தில் தற்காலிகமாகவும் மற்றும் நிரந்தரமாகவும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இடையிலான சம்பளத்தில் இருக்கும் மாறுபாடுகள் கூட இந்த வருடத்தில் குறைக்கப்பட்டிருக்கிறது என்று டீம் லீஸ்- ன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் சில்லறை வணிகம் மற்றும் தொலை தொடர்பு துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் 12 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரைக்கும் உயர்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த படியாக பெரு நகரங்களிலிருக்கும் ஹெல்த் கேர் மற்றும் மீடியா மற்றும் எனர்ஜி மற்றும் எப்எம்சிஜி துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளமும் 10.5 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதம் வரைக்கும் உயருகிறது.

பணியாளர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்கிற பெருநகரங்களில் மும்பை முன்னிலை வகிக்கிறது.இதற்கு அடுத்தபடியாக டெல்லி, பெங்களூரு இருக்கிறது.

பெருநகரங்களில் முக்கியமான பல்வேறு துறைகளில் கை நிறைய சம்பளத்தில் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அந்த வேலையை செய்வதற்கு உரிய திறமையான நபர்கள் தான் தேவை தான் இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. திறமை இருந்தால் வேலையோடு சம்பளமும் உயர்ந்து கொன்டே இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close