Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா ஸ்டீல் : ரூ. நிகர இழப்பு 5,674 கோடி

டாடா ஸ்டீல் நிறுவனத்தின்  2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் ஒட்டு மொத்தமான நிகர இழப்பு 5,674 கோடி ரூபாயாக உள்ளது. 

2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 1,036 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியிருந்தது.

இந்த நிறுவனத்தின் மொத்த வருமானமும் சரிந்துள்ளது.  2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 42,428 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 20.6 % சரிந்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 33,666 கோடி ரூபாயாக உள்ளது.

2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 3,090 கோடி ரூபாயாக இருந்த செயல்பாட்டு லாபமும் பாதியாக குறைந்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 1,580 கோடி ரூபாயாக உள்ளது.

நிகர இழப்பு மற்றும் மொத்த வருமானம் குறைந்ததால் டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கின் விலையும் தற்போதைய நிலையில் 5 % குறைந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ