Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 11 மடங்காக உயர்வு

ஆன்லைன் வழியாக வழங்குகிற இ விசா வசதியை கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியதிலிருந்து வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 11 மடங்காக உயர்ந்திருக்கிறது.2015 ம் ஆண்டு ஜனவரிக்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் வெளி நாட்டிலிருந்து 94,998 சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்திருக்கின்றனர். 2014 ம் ஆண்டு ஜனவரிக்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் வெளி நாட்டிலிருந்து 8008 சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு வந்திருந்தனர்.


ஆரம்பத்தில் இந்தியாவிற்குள் சுற்றுலா வருவதற்கு அரசாங்கம் 12 நாடுகளுக்கு மட்டுமே விசா அனுமதி வழங்கியிருந்தது. இந்த மாதத்தில் இன்னும் 31 நாடுகளுக்கு விசா அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவிற்கு சுற்றுலா வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படம் மற்றும் இ விசா விற்கான தொகை இருந்தாலே போதுமானது. அவர் ஆன்லைனில் இ விசா வேண்டி விண்ணப்பித்து இருந்தால் 72 மணி நேரத்திற்குள் அவருக்கான பதில் கிடைத்துவிடும். 

2015 ம் ஆண்டுக்கான உலக பொருளாதார சங்கத்தின் பயண மற்றும் சுற்றுலாவிற்கான போட்டியில் 13 வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது என்று இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார. இ விசா முப்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு பிறகு மறுபடியும் புதுப்பிக்க வேண்டும்.. இ விசா செல்லுபடியாகும் நாட்களை அறுபது நாட்களாக நீடித்தால் இன்னும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் சரப் ஜித் சிங் தெரிவித்தார்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close