Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடன் சுமையால் டிஎல் எப் -ன் நிகர லாபம் சரிவு

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப் -ன் நிகர லாபம் குறைந்துள்ளது. 2014 -15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் சுமார் 20 % சரிந்து 172 கோடி ரூபாயாக உள்ளது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 220 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2, 522 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த வருமானம் 17 % சரிந்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2, 101கோடி ரூபாயாக இருக்கிறது 

2013-14 ம் நிதி ஆண்டில் 646 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 16 % சரிந்து 2014-15ம் நிதி ஆண்டில் 540 கோடி ரூபாயாக உள்ளது. கடனுக்கான வட்டியின் விகிதம் உயர்ந்ததால் இந்த நிறுவனத்தின் வட்டிச் சுமை அதிகரித்து நிகர லாபம் குறைந்துள்ளது. நிகர லாபம் சரிந்திருந்தாலும் டிஎல் எப் நிறுவனப் பங்கின் விலை தற்போதையை நிலையில் 1.5 % அதிகரித்தே வர்த்தகமாகியிருக்கிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ