Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைந்த்ராவின் விற்பனை 10 சதவிகிதம் சரிவு

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான பிலிப்கார்ட்டின் ஒரு அங்கமான மைந்த்ராவின் விற்பனை 10 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. ஆரம்பத்தில் மைந்த்ரா இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தை நடத்திக் கொண்டிருந்தது. கடந்த வாரத்தில் இணைய தளத்தை மூடிவிட்டு மொபைல் ஆப்ஸ் வழியாக ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்க ஆரம்பத்திலிருந்து இந்த விற்பனை குறைவை மைந்த்ரா சந்திதிருக்கிறது. 

பிலிப்கார்ட்டும் இணைய தளத்தை மூடிவிட்டு ஆப்ஸ் வழியாக ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்க இருப்பது குறிப்பைடத்தக்கது.
ஆப்ஸ் வழியாக நடத்திய ஆன்லைன் வர்த்தகத்தால் மைந்த்ராவிற்கு ஏற்பட்டிருக்கும் சரிவு அதன் போட்டியாளர்களான அமேசான், ஸ்நேப்டீல், இபே போன்ற ஆன்லைன் நிறுவனங்களை விழிப்படைய செய்திருக்கிறது.இணைய தளத்தை மூடிவிட்டு மொபல் ஆப்ஸில் கவனம் செலுத்துகிற எந்த திட்டமும் இல்லை என்று அவை தெரிவித்திருக்கிறது.
 
எங்களுடைய வாடிக்கையாளர்கள் அதிகமாக கம்ப்யூட்டரை பயன்படுத்தி இணையதளத்தின் வழியாக தான் ஷாப்பிங் செய்கின்றனர். அவர்களை இதை பயன்படுத்தி தான் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று எங்களால் சொல்ல முடியாது என்கிறது ஸ்னாப்டீல். இப்படியிருந்த போதும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மொபைல் வழியாகத்தான் ஸ்னாப்டீலில் ஷாப்பிங் செய்கின்றனர்.
 
அமேசான் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி அக்சை சகி " வாடிக்கையாளரை அன்போடு நடத்துகிற கம்பெனியாக அமேசான் இந்தியா இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஷாப்பிங் செய்வதற்காக உதவ நாங்கள் காத்திருக்கிறோம் " என்றார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ