Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ல் ஆன்லைன் வர்த்தகம்: இந்தியாவில் 2,200 கோடி டாலர்!

ஆன்லைன் வர்த்தகத்தில் ஆடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், மளிகை சாமான்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துப் பொருட்களும் வர்த்தகமாகி வருகின்றன. இந்த வர்த்தகமானது 2015-ம் ஆண்டுக்குள் 2,200 கோடி டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என பிடபிள்யூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இ-காமர்ஸ் நிறுவனமான அமேஸானுடன் ஒப்பந்தமிட்டிருப்பதை சுட்டிக் காட்டி, இது போன்ற செயல்களால் ஆன்லைன் வர்த்தகம் நிச்சயம் வளர்ச்சி பெறும் என்பதையும்  பிடபிள்யூசி தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டுடன் ஆன்லைன் வர்த்தக வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது 34% வளர்ச்சி கண்டு 2014-ல் 1,640 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நடப்பு ஆண்டுக்குள் 3.80 கோடியாக அதிகரிக்க இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP