Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுக்காப்பீட்டுத் துறை பிரீமிய வருவாய்...ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்!

பொதுக்காப்பீட்டுத் துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்களும், 17 தனியார் நிறுவனங்களும் உள்ளன. இவைகளை தவிர தனியாக ஐந்து மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுக்காப்பீட்டு துறையின்  பிரீமியம் வருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12% அதிகரித்து 9,400 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,422 கோடி ரூபாயாக இருந்தது.

 கடந்த ஏப்ரல்,2015- நிலவரபப்டி நான்கு பொதுத் துறை நிறுவனங்களில் மொத்த பிரீமியம் வருவாய் 4,940 கோடியாக அதிகரித்துள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 10.5% அதிகமாகும். அதே போல 17 தனியார் நிறுவனங்களின் மொத்த பிர்ரிமியம் வருவாய் 12% அதிகரித்து 4,073 கோடி ரூபாயாகவும், ஐந்து மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய் 172 கோடியிலிருந்து 255 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்தமாக பொதுக் காப்பீட்டுத் துறையின் பிரீமியம் வருவாய் வளர்ச்சி 2013-14-ம் நிதி ஆண்டில் 77,540 கோடி ரூபாயாக காணப்பட்டது. இது கடந்த 2014-15-ம் நிதி ஆன்டில் 9.3% அதிகரித்து 84,715 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் இதன் வளர்ச்சி ஒரு லட்சம் கோடியை தாண்டும் என பொதுக்காப்பீட்டு கவுன்ஷில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ