Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வோல்டாஸ் நிகர லாபம் உயர்வு!

 வோல்டாஸ்  நிகர லாபம் உயர்வு 

வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் டாடா குழுமத்தை சேர்ந்த வோல்டாஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 100.41 கோடி ரூபாயாக இருந்த ஒட்டுமொத்த நிகர லாபம் 17.55 % அதிகரித்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 118.04 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையும் அதிகரித்திருக்கிறது.

2013-14ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 1450.36 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை 2.32 % அதிகரித்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 1,484.09 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது

நிகர லாபம் அதிகரித்ததால் வோல்டாஸ் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 7 % அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ