Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரிட்டானியாவின் நிகர லாபம் உயர்வு

பிரிட்டானியாவின் நிகர லாபம் உயர்ந்தது. 2013-14ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 108 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த நிகர லாபம் 55% அதிகரித்து 2014-15ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 167 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருமானமும் உயர்ந்துள்ளது. 2014-15ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 14.3 % அதிகரித்து 2,032 கோடி ரூபாயாக உள்ளது. 

இந்த நிறுவனத்தின் 2013-14ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 147 கோடி ரூபாயாக இருந்த செயல்பாட்டு லாபம் 38.7 % அதிகரித்து 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 204 கோடு ரூபாயாக இருக்கிறது. 

நிகர லாபம் அதிகரிப்பால் பிரிட்டானியா நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 7% அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ