Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 23% உயர்வு

எதிர்பார்த்ததை விட எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் உயர்ந்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடுகளை குறைத்ததால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) நிகர லாபம் எதிர்பார்த்ததை விட உயர்ந்திருக்கிறது .

2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 23% அதிகரித்து 3,742 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 3,041 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 14% உயர்ந்து 14,712 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டில் 12,903 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் உயர்வு காரணமாக உடனடியாக எஸ்பிஐ வங்கியின் நிறுவனப் பங்கின் விலை 5 % அதிகரித்து வர்த்தகமானது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ