Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா சொத்தில் யாருக்கு உரிமை உண்டு!

 என் அம்மா சம்பாதித்த சொத்துக்களில் யாருக்கு எல்லாம் உரிமை உண்டு, அந்த சொத்துக்களை என் அம்மா யாருக்கு எல்லாம் எழுதி வைக்க முடியும்?

ஆர்.சந்திரபானு, கோவை,
 
ஜீவா, வழக்குரைஞர்.
‘‘உங்கள் அம்மா சம்பாதித்த சொத்து அல்லது உங்கள் அம்மாவுக்கு அவரது பெற்றோர்கள் மூலம் கிடைத்த சொத்துக்களை அவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். ஒருவேளை உங்கள் அம்மா சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அவரது வாரிசுகளுக்கு சமபங்காக சொத்துக்கள் போய் சேரும். உங்கள் தாய் இந்துவாக இருப்பதால், உங்கள் தந்தைக்கும் (உயிருடன் இருந்தால்) சொத்துக்களில் உங்களுக்கு உள்ள அதே சமஉரிமை உண்டு.’’
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ