Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 வருட முதலீட்டுக்கான மியூச்சுவல் ஃபண்டுகள்!

 எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் 20 வருட முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும்?

டி.மணியன், சென்னை,  

எஸ்.பாரதிதாசன், முதன்மை நிர்வாக அதிகாரி, வெல்த் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ்.

 

‘‘எந்த ஒரு முதலீட்டுக்கும் சொத்துக் களை (வெல்த்) உருவாக்க ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. நீங்கள் 20 வருடம் முதலீடு செய்யப்போவதாக கூறி இருக்கிறீர்கள். இது சொத்துக்களை உருவாக்கப் போதுமானது. நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் தொகையில் 50% டைவர்ஸிஃபைடு ஃபண்டிலும், 25% தொகையை மிட்கேப் ஃபண்டிலும், மீதி 25% தொகையை பேலன்ஸ்டு ஃபண்டிலும் முதலீடாக செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

டைவர்ஸிஃபைடு ஃபண்டுக்கு பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், மிட் கேப் ஃபண்டுக்கு ஹெச்டிஎஃப்சி மிட் கேப் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்டுக்கு டாடா பேலன்ஸ்டு ஃபண்ட் போன்றவைகளில் முதலீடு செய்யலாம். இந்த கலவையான ஃபண்டுகள் மூலம் வருடத்துக்கு குறைந்தபட்சம் 18% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ