Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிட்டி யூனியன் பேங்க்- ன் நிகர லாபம் உயர்வு

சிட்டி யூனியன் பேங்க்-ன் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 18.7 சதவிகிதம் உயர்ந்து 99.08 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 83.34 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 720.64 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 10.13 சதவிகிதம் உயர்ந்து 2014-15ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 763.65 கோடி ரூபாயாக இருக்கிறது

2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் வைப்பு நிதியும் 9.35 சதவிகிதம் அதிகரித்து 24,075 கோடி ரூபாயாக உள்ளது . முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 22,107 கோடி ரூபாயாக இருந்தது. 

சிட்டி யூனியன் பேங்க் நிர்வாக இயக்குனர் என். காமகோடி வங்கியின் வணிகம் அதிகரித்தது மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கு கடன் வழங்காதது போன்றவை நிகர லாபம் அதிகரித்தற்கான காரணங்களாக சொன்னார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ