Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனரா பேங்க்-ன் நிகர லாபம் அதிகரிப்பு

 கனரா பேங்க்-ன் நிகர லாபம் அதிகரிப்பு. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 613 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 611 கோடி ரூபாயாக இருந்தது

இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் குறைந்திருக்கிறது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2,535 கோடி ரூபாயாக இருந்த நிகர வட்டி வருமானம் 1.9 % குறைந்து 2,486 கோடி ரூபாயாக இருக்கிறது 

மொத்த வாராக் கடன் அதிகரித்திருக்கிறது. 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2.49 சதவிகிதமாக இருந்த வாராக்கடன் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 3.89 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. 2014 டிசம்பர் முடிவில் வாராக் கடன் 3.35 சதவிகிதமாக இருந்தது. 

நிகர லாபம் அதிகரித்து இருந்தாலும் வாராக் கடன் உயர்ந்திருப்பதால் கனரா பேங்க் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு 5.40 சதவிகிதம் குறைந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ