Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.வி.எஸ் மற்றும் டி.ஐ.இ.எஸ்.எல் நிறுவனங்கள் இணைப்பு...

டி.வி.எஸ் மற்றும் டி.ஐ.இ.எஸ்.எல் நிறுவனங்கள் இணைப்பு...

டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட், ட்ரைவ் இந்தியா என்டர்பிரைசஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த இருக்கும் செய்தியை இரு நிறுவனங்களும் இணைந்து  மே 26,  2015 அன்று  நடத்திய  பத்திரிகையாளர்  சந்திப்பில் தெரிவித்தது

இந்தியாவின்  முன்னனி லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனமான டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் சரிவீசஸ் லிமிடெட், ட்ரைவ் இந்தியா என்டர்பிரைசஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக டி.வி.எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் தெரிவித்தார்.
 
டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இன்றைய தேதியில் ஆட்டொமொபைல்  லாஜிஸ்டிக்ஸில் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறது, பத்து ஆண்டை நிறைவு செய்த இந்த நிறுவனம் உலகின் 50 நாடுகளில் சேவைகளை வழங்குகிறது.  இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் தோராயமாக 30 லட்சம் சதுர அடிக்கு சேமிப்பு கிடங்குகள் இருக்கின்றன. 
 
இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் டி.வி.எஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருக்கின்றனர்.  உலக அளவில் பெரிய நிறுவனங்களான பி அண்ட் ஜி, கார்கில், கோககோலா, அமேசான்.... போன்ற நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருக்கின்றன. 
 
டி.ஐ.இ.எஸ்.எல் என்று அழைக்கப்படும் ட்ரைவ் இந்தியா என்டர்பிரைசஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் 2003ல் தொடங்கப்பட்டு தற்போது இந்தியாவில் 189 இடங்களில் 65 லட்சம் சதுர அடிக்கு சேமிப்பு கிடங்கு வைத்திருக்கிறது.   இந்த நிறுவனம்  எஃப்.எம்.சி.ஜி, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ரீடெயில், கெமிக்கல்ஸ் அண்ட் பெயின்ட்ஸ், ஆட்டொமொபைல் என்று பல துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாக சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கும் இந்தியா மற்றும் வெளிநாட்டின் முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. 
 
டி.வி.எஸ் மற்றும் டி.ஐ.இ.எஸ்.எல் இணைக்கப்பட்டால் மொத்த வருமானம் 4,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக ஈட்ட முடியும். மொத்த சேமிப்பு கிடங்குகளின் அளவு சுமார் 1 கோடி  சதுர அடியை தாண்டும். அநேகமாக இந்தியாவில் 1 கோடி சதுர அடிக்கு சேமிப்பு கிடங்கு வைத்திருக்கும் நிறுவனம் டி.வி.எஸ் நிறுவனமாகத் தான் இருக்கும். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 15,000த்தை தாண்டும்.
 

 
"இந்தியாவில் ஒன்று போல வளர்ந்த இரண்டு பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இணைப்பின் மூலம், டி.விஎஸ் பல துறை சார்ந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, தன் வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற சிறப்பான சேவைகளை வழங்க முடியும்" என்று தெரிவித்தார் டி.வி.எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ்.
 
 
 
டாடா இண்டஸ்ட்ரீஸின் செயல் இயக்குநர் மற்றும் டி.ஐ.இ.எஸ்.எல் நிறுவனத்தின் இயக்குநர் கே.ஆர்.எஸ்.ஜம்வால் கூறுகையில் " எங்கள் இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் உள்ள நம்பிக்கை, உண்மைத் தன்மை,  மற்றும் சந்தோஷம் போன்றவைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்த இணைப்பால் இரண்டு நிறுவனங்களும் பரஸ்பரம் பலன் அடையும்" என்று கூறினார்.
 
இந்த கையகப்படுத்தலுக்கு உந்து சக்தி அளிப்பது போல டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கிறது டாடா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்.  "அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் வரை முதலீட்டு தொகையாக இருக்கும் " என்றும் தெரிவித்தார் டாடா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டின் நிர்வாக பங்குதாரர் பத்மநாப சின்ஹா.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ