Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐடிபிஐ பேங்க் நிகர லாபம் அதிகரிப்பு

 ஐடிபிஐ பேங்க் நிகர லாபம் அதிகரிப்பு 

பொதுத் துறை நிறுவனமான ஐடிபிஐ பேங்க்-ன் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நிகரலாபம் 5.2 சதவிகிதம் அதிகரித்து 545 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 518 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் 2014 ம் நிதி ஆண்டில் 1,121 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் 2015 ம் நிதி ஆண்டில் 873 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. மிதமான வட்டி வருமானத்தாலும் அதிகமான ஒதுக்கீடுகளாலும் நிகர லாபம் குறைந்திருக்கிறது 

நிகர வட்டி வருமானம் உயர்ந்திருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 5 சதவிகிதம் அதிகரித்து 1,660 கோடி ரூபாயாக உள்ளது .முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர வட்டி வருமானம் 1,574 கோடி ரூபாயாக இருந்தது. 

மொத்த வாராக் கடன் அதிகரித்து இருக்கிறது. 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் மொத்த வாராக் கடன் 5.88 சதிவிகிதமாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 4.90 சதவிகிதமாக இருந்தது.

நிகர லாபம் அதிகரித்து இருப்பதால் ஐ டீ பி ஐ பேங்க் நிறுவனப் பங்கின் விலையும் தற்போதைய நிலையில் 3.25 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP