Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு!

பெல் நிறுவனத்தின் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் நிகர லாபம் 52 சதவிகிதம் சரிந்து 888.35 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,844 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் 2013-14ம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 15,320 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 17 சதவிகிதம் குறைந்து 2014-15ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 12,702 கோடி ரூபாயாக உள்ளது.
 

2013-14 ம் நிதி ஆண்டில் 3,460.78 கோடி ரூபாயாக இருந்த மொத்த நிகர லாபம் 59 சதவிகிதம் குறைந்து 2014-15 ம் நிதி ஆண்டில் 1,419.29 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் செலவுகள் குறைந்திருந்த போதிலும் நிகர லாபமும் குறைந்திருக்கிறது. நிகர லாபம் குறைந்து இருந்த போதிலும் பெல் நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 3.35 சதவிகிதம் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ