Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் சென்செக்ஸ்; இறக்கத்தில் நிஃப்டி!

3.30 மணி நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (01.06.2015) காலையில்    தேக்கத்துடன்  ஆரம்பித்து  முடியும்போது சென்செக்ஸ் ஏற்றத்துடனும், நிஃப்டி இறக்கத்துடனும் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 20.55    புள்ளிகள் அதிகரித்து  27,848.99   என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.25  புள்ளிகள் குறைந்து  8,433.40 என்ற நிலையில் வர்த்தகமானது.   

சென்செக்ஸில் 1214  பங்குகள் ஏற்றத்திலும், 1528  பங்குகள் இறக்கத்திலும்,163    பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 612  பங்குகள் ஏற்றத்திலும், 813    பங்குகள் இறக்கத்திலும்,65  பங்கு மாற்றமின்றியும்  வர்த்தகமாயின. மின்   மற்றும் வாகன  உற்பத்தி   நிறுவனங்களின் பங்குகள்  ஏற்றத்துடன் வர்த்தகமாயின.


விலை அதிகரித்த பங்குகள்
லார்சன்  ( 3.09% )
ரிலையன்ஸ்   ( 2.88%)
மாருதி சுசூகி    ( 2.57%)
டாடா பவர் (2.08%)

விலை குறைந்த பங்குகள்

எச் சி எல் டெக்   (-3.71%)

லுபின்  (-2.25%)

பார்தி ஏர்டெல்  (-2.11%)

சன் பார்மா (- 9.16%)


12.00 மணி நிலவரம் 
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(01.06.2015)  மதியம் 12.00  மணியளவில் ஏற்றத்துடன்  வர்த்தகமாகி வருகிறது .  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 80.47 புள்ளிகள் அதிகரித்து 27,908.91 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.30 புள்ளிகள்  அதிகரித்து   8,451.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.22  % குறைந்து  26,800 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.51 % குறைந்து   38,155 ரூபாயாக உள்ளது.
 
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.34% குறைந்து    3,817 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.32% குறைந்து  63.61  ரூபாயாக உள்ளது
 
 
விலை அதிகரித்த பங்குகள்

சிப்லா    ( 2.85)
ரிலையன்ஸ்  ( 2.83 )
பிபிசிஎல்    (2.00)
லார்சன்  (1.86%)
ஐடீசி  (1.71 %) 
       

விலை குறைந்த பங்குகள்

சன் பார்மா    (-8.17 )
எச் சி எல் டெக்   ( -2.45)
பார்தி ஏர்டெல்   (-2.41)
லுபின்    ( - 1.75)
டாடா மோட்டர்ஸ்  ( - 1.53)
 
 
10.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ்             27831.11  மாற்றம்  +2.67
நிஃப்டி                          8434.40 மாற்றம் +0.75
இந்திய சந்தைகளின் ஏற்ற விகிதம் 0.03%
 
 தங்கம் 10 கிராம் ரூ.26,798 மாற்றம் ரூ. -62.00
கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு ரூ.3,828.00 மாற்றம்  ரூ. -41.00
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.93 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
ஏற்றப் பங்குகள்
சிப்லா 3.04%
வேதாந்தா 1.91%
பிபிசிஎல் 1.91%
ரிலையன்ஸ் 1.71%
ஐடிசி 1.53%
 
இறக்கப் பங்குகள்
சன் பார்மா -8.88%
பார்தி ஏர்டெல் -2.20%
ஹெச் சி எல் டெக் -1.76%
டாடா மோட்டார்ஸ் -1.68%
லுபின் -1.21%
 


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP