Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரன்சி முன்பேர வர்த்தகம் 67% அதிகரிப்பு!

கடந்த ஏப்ரம் மற்றும் மே மாதத்தில் இந்தியாவின் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான கரன்சி முன்பேர வர்த்தகம் 67% அதிகரித்து 11.60 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதங்களில் ஏழு லட்சம் கோடி ரூபாயாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. அதே போல இதே மாதங்களில் கரன்சி முன்பேர வர்த்தக ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 56% அதிகரித்து 17.57 கோடி ரூபாயாக உள்ளது. இதில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் 7.38 கோடி அளவிலான வர்த்தக ஒப்ந்தங்களும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியில் 9.57 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களும், எம்எஸ்இஐ-ல் 61.42 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தங்களும் அதிகரித்துள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ