Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லைஃப் செல் நிறுவனத்துக்கு கூகுள் எஸ்எம்இ ஹீரோ விருது

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி தங்களின் வணிகத்தை பெருக்கி, புதுமையை புகுத்தி யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களை பாராட்டும் விதமாக கூகுள் SME Heroes Challenge Regional Award என்ற விருதை அறிவித்திருக்கிறது. இந்த முறை சென்னையைச் சேர்ந்த லைஃப் செல் நிறுவனம் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.              
 
இந்தியாவில் முப்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்.ஒவ்வொரு மாதமும் இன்டர்நெட் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. பெரும் நிறுவனங்கள் தங்களின் வணிகம் மற்றும் விளம்பரத்திற்காக இன்டர்நெட்டை முக்கிய களமாக வைத்து செயல்படுகின்றன..

இன்டர்நெட்டில் வணிகம் சம்பந்தமான செய்திகளை தேடுவதில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர் வணிகம் பற்றிய தகவல்கள் இன்டர்நெட்டில் அதிகமாக கிடைப்பதில்லை. உள்ளூர் வணிகத்திற்கான இட்ம் இன்டர்நெட்டில் காலியாகவே இருக்கிறது. அந்த இடத்தை நிரப்புவதற்காக கூகுள் நிறுவனம் பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது. சுமார் 5 கோடிக்கும் அதிகமான சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. அவற்றில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 5 லிருந்து 6க்கும் குறைவான சதவிகிதத்தில் தான் இருக்கும் என்று கூகுளின் கணிப்பு சொல்கிறது 

கூகுள் நிறுவனம் 2017 இல் சுமார் 2 கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஆன்லைக்குள் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறது 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP