Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 ஆண்டில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் முதலீடு!

 எனக்கு ஆறு ஆண்டு களில் ரூ.10லட்சம் தேவை. மாதம் ரூ.10,000 வரை முதலீடு செய்ய முடியும். நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.

-பிரியா, பெங்களூரூ, 

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், புதுச்சேரி

‘‘நீங்கள் குறிப்பிட்ட ஆறு ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க, ஈக்விட்டி லார்ஜ் கேப் ஃபண்டுகளுக்கு பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், டாடா பியூர் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.பேலன்ஸ்டு ஃபண்டுகளுக்கு பிர்லா சன் லைஃப் 95 ஃபண்ட், டாடா பேலன்ஸ்டு ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி புருடென்ஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பேலன்ஸ்டு ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். லார்ஜ் கேப் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகள் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தரக்கூடியவை.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ