Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நிஃப்ட் (NEFT) இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நிஃப்ட் (NEFT) இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

என்.செந்தில்நாதன், மதுரை, 
ஆர்.கணேசன், உதவிப் பொது மேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.

‘‘நேஷனல் எலெக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்பர் என்று அழைக்கப்படுவதன் மூலம் தனிநபர், நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரு வங்கிக்  கணக்கிலிருந்து வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். இதற்கு பணம் அனுப்பக்கூடிய மற்றும் பணம் பெறக்கூடிய வங்கிகள் நிஃப்ட் வசதி இருக்க வேண்டும். இதன் மூலம் பணம் அனுப்பினால் 30 நிமிடம் முதல் 2 மணி நேரத்துக்குள் பணம் கிரெடிட் செய்யப்படும். 

இந்த பணப் பரிமாற்றத்துக்கு அதிகபட்ச தொகை வரம்பு கிடையாது. இந்த வசதி வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8 முதல் பகல் 1 மணி வரையும் கிடைக்கும். இந்தச் சேவைக்கு அனுப்பப்படும் தொகையைப் பொறுத்து 2.50 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் என்பது ஒரு எலெக்ட்ரானிக் பேமென்ட் சிஸ்டம்தான். ஆனால், இது பெரிய தொகையை அனுப்ப உதவக்கூடியது. குறைந்தபட்சமாக 2 லட்சம் ரூபாய் முதல் இந்த வசதி மூலம் பணம் அனுப்பலாம். இதற்கு எந்த அதிகபட்ச வரம்பும் கிடையாது. இந்த முறையில் பணம் அனுப்பினால் உடனடியாக பணப் பரிமாற்றம் செய்யப்படும். ஆர்டிஜிஎஸ் வழக்கமான வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையும் செய்யப்படும். இந்த வசதிக்கு ரூபாய் 30 - 55 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ