Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது

ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி  விகிதத்தை குறைத்தது 

ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டியான   ரெப்போ ரேட்டை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்திருக்கிறது.  கேஷ் ரிசர்வ் ரேஷியோ மற்றும் ஸ்டாச்சுடரி லிக்விடிட்டி ரேஷியோ வில் எந்த மாற்றமும் இல்லை.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 7.25% ஆக வட்டியை நிர்ணயித்திருக்கிறது. இந்த வட்டி விகித குறைப்பு 2015 ஆம் ஆண்டில் மூன்றாவது முறை. ஜனவரி 2015 மற்றும் மார்ச் 2015 ஆகிய இரண்டு முறையும் 25 அடிப்படை புள்ளிகள் தான் குறைத்திருக்கிறது. 

 
தற்போதைய நிலவரத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்திற்கு 4.85% ஆகவும், மொத்த விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்திற்கு -2.65% ஆகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ