Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏப்ரல் மாதத்தில்... நாட்டின் முக்கிய துறைகளின் வளர்ச்சி குறைவு!

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய துறைகளாக விளங்குகின்றன. நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதிலும் இந்த எட்டு துறைகளின் பங்கு 38 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்த முக்கிய துறைகளின் வளர்ச்சியானது 0.1% மற்றும் 0.4% என்ற விகிதத்தில் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஏபரல் மாத நிலவரப்படி கச்சா எண்ணெய் 2.7%, இயற்கை எரிவாயு 3.6%, மின்சாரம் 1.1%, பெட்ரோலிய பொருட்கள் 2.9%, சிமென்ட் 2.4%, உரம் 0.04% என்கிற விகிதத்தில் வளர்ச்சியானது குறைந்து காணப்படுகிறது. நிலக்கரி மற்றும் உருக்கு ஆகிய இரு துறைகளின் வளர்ச்சி விகதம் முறையே 7.9% மற்றும் 0.6 சதவிகிதம் உயர்ந்து காணப்படுகின்றன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP