Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின்.. இந்தியாவின் முதலீடு 10,770 கோடி டாலர்!

அமெரிக்க அரசின் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டின் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் கடன் பத்திரங்களின் முதலீட்டு வளர்ச்சி பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த மார்ச் மாதத்தின் இறுதி நிலவரப்படி அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டிருக்கும் கடன் பத்திரத்தில் இந்தியாவின் முதலீடு 10,700 கோடி டாலராக அதிகரித்து காணப்படுகிறது. சென்ற ஆன்டின் இதே மாதத்தில் இதன் மீதான இந்தியாவின் முதலீடு 7,010 கோடி டாலராக இருந்தது. நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு  அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த முதலீடு 10,000 கோடி டாலராக அதிகரித்தது. அதற்கு அடுத்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா 700 கோடிகளை முதலீடு செய்திருக்கிறது. இந்த மாதத்தில் அமெரிக்க அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களில் 1.26 கோடி டாலர் முதலீடு செய்து சீனா முதலிடத்திலும், 1.23 கோடி டாலர் முதலீடு செய்து ஜப்பான் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ