Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி எம் ஆர் இன்ஃப்ரா-ன் நிகர இழப்பு 892 கோடி ரூபாய்!

ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்டிரக்சர் -ன் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் ஒட்டு மொத்த நிகர இழப்பு 892 கோடி ரூபாயாக உள்ளது . முந்தைய ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 1,170 கோடி ரூபாயாக இருந்தது. கடன் சுமை அதிகமான காரணத்தால் இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு உயர்ந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் 2013-14 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2,930 கோடி ரூபாயாக இருந்த செயல்பாட்டு வருமானம் 2014-15 ம் நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டில் 2,872 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது 2014-15 ம் நிதி ஆண்டில் ஒட்டு மொத்த நிகர இழப்பு 2,733 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் லாபம் 10 கோடியாக இருந்தது. நிகர இழப்பு மற்றும் வருமானம் குறைவு காரணமாக ஜி எம் ஆர் இன்ஃப்ரா நிறுவனப் பங்கின் விலை தற்போதைய நிலையில் 0.34 சதவிகிதம் குறைந்து வர்த்தகமாகி வருகிறது 


 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ