Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர் கேள்வி நேரம்!

நாணயம் விகடன் ட்விட்டர் நேரம் ஆரம்பித்துவிட்டது. கமாடிட்டி வர்த்தகம் தொடர்பான உங்களின் கேள்விகளை, உங்களது ட்விட்டர் கணக்கிலிருந்து @nanayamvikatan உங்கள் கேள்வி ‪#‎AskNV‬ என்று ட்விட் செய்து பதில் பெறுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


1. டாலர், தங்கம், கச்சா எண்ணெய் கமாடிட்டி ஆகியவைகளை வர்த்தகம் செய்வதற்கு, என்ன என்ன அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்?

பொதுவாக கமாடிட்டி வியாபாரத்தில் டிமாண்ட் மற்றும் சப்ளை அடிப்படையில் விலை மாறுபடுகிறது. டாலர் தங்கம் கச்சா எண்ணெய் ஆகியவைகளில் டிமாண்ட் கூடும் போது வாங்கி விற்கலாம். டிமாண்ட் குறையும் போது விற்று வாங்கலாம். டாலரின் விலை அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் அதற்கான தேவை கூடினால் வலிமையாக மாறும். 

 
தங்கத்தின் விலை நிதி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப உலக சந்தையில் மாறும். டாலர் ஏறினால் தங்கம் இறங்குவதும், தங்கம் ஏறினால் டாலர் இறங்குவதும் சகஜம். கச்சா எண்ணெயை பொறுத்தவரை அமெரிக்காவின் கையிருப்பு கூடுவதும் குறைவதும் பொறுத்து உலக சந்தைகளில் விலை மாறும்.

2. கமாடிட்டியில் என்ன என்ன பொருட்கள் வர்த்தகம் செய்யலாம். ? ஆரம்ப கால முதலீடு எவ்வளவு தேவைப்படும் ?

கமாடிட்டி வியாபாரம் என்பது ஃப்யூச்சர்ஸ் எனப்படும் மொத்த வியாபார வகையை சார்ந்தது. எத்தனை எண்ணிக்கையில் வாங்கலாம் விற்கலாம் என்பதை எக்ஸ்சேஞ்சே முடிவு செய்யும். இதைத் தான் லாட் அளவு என்போம். ஆரம்ப முதலீடு என்பது ஒரு லாட் மதிப்பில் தோராயமாக 5 - 10 %  தொகை இருக்கும். கமாடிட்டியில் பொதுவாக வியாபாரம் செய்யக் கூடிய பொருட்கள் விலை உயர்ந்த உலோகங்கள், அடிப்படை உலோகங்கள், எனர்ஜி ப்ராடெக்ட்ஸ், விவசாய பொருட்கள் போன்றவைகளை வர்த்தகம் செய்யலாம். 
http://www.mcxindia.com/# இந்த லிங்கை சொடுக்கி அதில் ப்ராடெக்ட்ஸ் என்கிற உள்லிங்கை சொடுக்கினால் கமாடிட்டி சந்தையில் என்ன பொருட்கள் வர்த்தகமாகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
 

3. உலகில் மிளகாய் விளைச்சல், சீதோஷன நிலை போன்றவைகளை தெரிந்து கொண்டால் தான் கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்து லாபம் பார்க்க முடியுமா?

எல்லா பொருட்களின் (மிளகாய் உட்பட) உற்பத்தி குறையும் போது விலை கூடுவதும், உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவதும் சகஜம். ஒவ்வொரு பொருளுக்கும் உற்பத்தி அதிகரிக்க அல்லது குறைய பல காரணங்கள் இருக்கும். அதே போன்று மிளகாயின் உற்பத்தி கூடுவதற்கோ அல்லது குறைவதற்கோ சீதோஷன நிலை ஒரு காரணம். இதை அறிந்து வியாபாரம் செய்வது அடிப்படை பகுப்பாய்வு என்று சொல்வோம். இதற்காக நிறைய தகவல்களை நீங்கள் தொடர்ந்து சேகரிக்க வேண்டும். மாறாக டெக்னிக்கல் அனாலிசிஸ் எனப்படும் விலையில் ஏற்படும் மாற்றத்தினால் வரையப்படும் வரைபடத்தை படித்து வியாபாரம் செய்யலாம்.

4. தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை பாதிக்கும் டேட்டாக்கள் என்ன என்ன. இந்த டேட்டாக்களை எங்கே தெரிந்து கொள்வது? 

தங்கம் விலையை நேரடியாக பாதிக்கக்கூடிய ஒரு புள்ளி விவரம் டாலர் இண்டெக்ஸ். அமெரிக்க  டேட்டாவும் தங்கம் விலையை பாதிக்கும். அவற்றுள் சில எம்பிளாய்மென்ட் டேட்டா, ஜிடிபி டேட்டா, கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ், இண்டஸ்ட்ரியல் ப்ரொடெக்‌ஷன். ரீடெயில் சேல் போன்றவைகள்.

 
5. கமாடிட்டி சந்தையில் நிக்கலில் டிரேட் செய்யும் போது என்ன மாதிரியான விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்?
 
பொதுவாக உலோகங்களின் கையிருப்பு மற்றும் தேவையுமே அதன் விலைகளை தீர்மானிக்கும். குறிப்பாக, நிக்கலில் மலேசிய சந்தையில் உள்ள கையிருப்பு நிக்கலின் உலக சந்தை விலையை தீர்மானிப்பதில் முன்னணி வகிக்கிறது. நிக்கலை வியாபாரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் மினி லாட்டில் வியாபாரம் செய்வது நல்லது (100 கிலோ).
 
 
6.நான் பருத்தித் தோட்டம் வைத்திருக்கிறேன், உற்பத்தி செய்யும் பருத்தியை கமாடிட்டி சந்தையில் விற்க முடியுமா?

பருத்தி சந்தையில் கண்டிப்பாக நீங்கள் உற்பத்தி செய்த பருத்தியை விற்க முடியும். பொதுவாக கமாடிட்டி சந்தையில் நீங்கள் விற்க விருப்பப்பட்டாலும் வாங்குவதற்கும் யாராவது தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் உங்கள் உற்பத்தியை விற்க முடியும்.  ஆனாலும் சந்தை விலையை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் உற்பத்தி  செய்த அளவிற்கு ஏற்ப கமாடிட்டி சந்தையில் விற்று ஹெட்ஜிங் செய்யலாம்.

7. மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகள் கமாடிட்டி சந்தையை இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகள் தங்கள் உற்பத்தியை கமாடிட்டி சந்தையில் நல்ல விலை கிடைக்கும் போது விற்று லாபம் பார்க்கலாம். மஞ்சளை மூட்டைகளாக எக்ஸ்சேஞ்ச் நிர்ணயித்த தரத்திலும், குடோனிலும் சேர்க்க வேண்டும். இது கொஞ்சம் சிரமம் தான். இதையும் தாண்டி, நீங்கள் மஞ்சளின் விலை எந்த எந்த காலகட்டத்தில் எந்த விலையில் விற்கும் என்று அறிந்திருந்தால், கமாடிட்டி சந்தையில் அந்த விலையை விட கூட்டியோ குறைந்தோ வியாபாரமானால், நீங்கள் கமாடிட்டி சந்தையில் வாங்கி விற்றோ, விற்று வாங்கியோ லாபம் பார்க்கலாம். மேலும் உங்கள் கையிருப்பில் இருக்கும் மஞ்சளுக்கு கமாடிட்டி சந்தையில் நல்ல விலை கிடைத்தால் ஹெட்ஜிங் முறையில் கமாடிட்டி சந்தையில் விற்று வாங்கலாம்.

8. கமாடிட்டி சந்தையில் டிரேட் செய்ய குறைந்தது எவ்வளவு பணம் வைத்திருக்க  வேண்டும்?

கமாடிட்டி சந்தையில் வியாபாரம் செய்ய நீங்கள் தேர்வு செய்யும் கமாடிட்டியின் லாட் மதிப்பில் தோராயமாக 5 - 10% கட்ட வேண்டி இருக்கும். கூடவே நீங்கள் வியாபாரம் செய்யும் போது நீங்கள் வாங்கிய விலையை விட சந்தை விலை குறையும் போது அதற்கு உண்டான எம்டிஎம் (மார்க் டூ மார்க்கெட்) லாஸ் கட்டுவ்வதற்ககும் தயாராக இருக்க வேண்டும்.


9. கமாடிட்டி டிரேட் செய்ய என்னன்ன ஆவணங்கள் தேவைப்படும்? கமாட்டி டிரேடிங் கணக்கு ஆரம்பிக்க என்னென்ன செய்ய வேண்டும்?

கமாடிட்டி டிரேடிங் கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள்
1.பான் அட்டை.
2. அட்ரஸ் ப்ரூஃப்
3. வங்கிக் கணக்கு
4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வியாபாரம் செய்ய முதலீடு ஆகியவைகள் இருந்தால் போதும். இந்த ஆவணங்களை வைத்து ஒரு கமாடிட்டி புரோக்கரிடம் சென்று கணக்கை துவக்கிக் கொள்ளலாம்.

11. நான் ஏற்கெனவே பங்குகளில் முதலீடு செய்துள்ளேன். அதே டீமேட் கணக்கில் கமாடிட்டி வர்த்தகம் மேற்கொள்ள முடியுமா?

 பங்குச் சந்தைக்கு துவக்கிய டீமேட் கணக்கு வேறு, கமாடிட்டி சந்தைக்கு துவக்கிய கணக்கு வேறு. ஆகவே கமாடிட்டி சந்தையில் டெலிவரி முறையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியான  டீமேட் கணக்கை, நீங்கள் வியாபாரம் செய்யும் கமாடிட்டி புரோக்கரிடம் துவக்க வேண்டும்.

 
12. கமாடிட்டி வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளுக்கு யாரிடம் முறையிடுவது? தமிழகத்தில் அந்த அமைப்பின்தொடர்பு முகவரி, தொலைபேசி எண், இ மெயில் எண் வேண்டும்?

கமாடிட்டி வர்த்தகம் தொடர்பான பிரச்னைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 
grievance@mcxindia.com.

நேரடியாக தொடர்பு கொள்ள Raheja Annexe Building, Gr.Floor, Omega Wing, General Patters Road, Anna Salai, Chennai – 600 002 என்கிற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

13. கமாடிட்டியை பற்றி விரிவாக மற்றும் தெளிவாக தெரிந்து கொள்ள ஏதாவது தமிழ் புத்தகம் இருக்கிறதா அல்லது எளிமையான ஆங்கிலத்தில் ஏதாவது புத்தகம் இருக்கிறதா?

 http://nanayam.vikatan.com/index.php?cid=151 என்கிற வலைதளத்தை முழுமையாக இலவசமாக படிக்கலாம். 

 
14. கமாடிட்டி சம்பந்தமான விஷயங்களை தொடர்ச்சியாக தெரிந்து கொள்ள எந்த மாதிரியான பத்திரிகைகள், தினசரிகள் சேனல்களை தொடர்ச்சியாக பார்க்கலாம்?
 


 நாணயம் விகடன் வாரா வாரம் படிக்கலாம். கமாடிட்டி பற்றிய புள்ளி விவரங்களை தெரிந்து கொள்ள mcxindia.com என்கிற வலைதளத்தை  பார்க்கலாம்.
 
 
15. என் வயது 21, எனக்கு கமாடிட்டியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, கமாடிட்டி என்றால் என்ன, இது எப்படி வர்த்தகமாகிறது, இதில் எப்படி லாபம் பார்ப்பது என்று முழுமையாக படத்துடன் கூடிய புத்தகம் ஏதாவது கிடைக்குமா ஆங்கிலம் தமிழ் என்று எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை.

பதில் : http://nanayam.vikatan.com/index.php?cid=151 என்கிற வலைதளத்தை முழுமையாக இலவசமாக படிக்கலாம். 

 
16. நான் கேரளாவில் மிளகு மண்டி வைத்திருக்கிறேன். என் மிளகை கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்ய முடியுமா?
 


என் எம் சி இ என்கிற கமாடிட்டி சந்தையில் உங்கள் ஊரில் இருக்கும் புரோக்கரிடம் கணக்கு துவக்கி வியாபாரம் செய்யலாம். தேவைப்பட்டால் பிசிக்கல் டெலிவரியும் கொடுத்து வியாபாரம் செய்யலாம் .

 
17. கமாடிட்டி டிரேடிங் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு எப்படி வரி கணக்கிடப்படும்?
 

கமாடிட்டி வியாபாரம் என்பது ஃப்யூச்சர்ஸ் எனப்படும் டெரிவேட்டிவ் வியாபாரம் ஆகும். டெரிவேட்டிவ் வியாப்பாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுவாக வியாபார வருமானமாகவே கணக்கிடப்படும்.

ஆகவே வரக்கூடிய லாபத்திற்கு 30% வருமான வரி செலுத்த வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் அந்த நஷ்டத்தை வரி தாக்கல் செய்வதன் மூலமாக வரக்கூடிய ஆண்டுகளில் வரும் லாபத்தில்  ஈடு செய்யலாம் (செட் ஆஃப்).  இப்படி அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நஷ்டத்தை கேரி ஃபார்வர்ட் செய்யலாம்.

18. ஹெட்ஜிங் என்றால் என்ன?
 
நம் கையில் இருக்கும் பொருட்களின்  விலையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவேளையில் நம் கைக்கு வர இருக்கும் பொருட்களின் விலையோ தற்போது இருக்கக்கூடிய விலையிலிருந்து குறையும் என்று எதிர்பார்த்தால், கமாடிட்டி சந்தையில் விற்பது என்பது ஹெட்ஜிங் ஆகும். 

ஒரு வேளை நீங்கள் ஸ்பெகுலேட்டாராக இருந்தால் ஒரே பொருளை நடப்பு மாதத்தில் வாங்கி இருந்தால், அதன் விலை மாற்றம் குழப்பமாக இருந்தால், நீங்கள் அடுத்த மாத கான்ட்ராக்டில் விற்று வைக்கலாம் இதையும் ஹெட்ங் என்போம். குழப்பம் தீர்ந்த பின் நாம் வாங்கி வைத்திருக்கும் கான்ட்ராக்டை தொடர நினைத்தால் கண்டிப்பாக விற்ற கான்ட்ராக்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.



விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP