Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் புதிய மொபைல் சந்தாதாரர்கள்: 26 மில்லியன்!

நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் மட்டும் 26 மில்லியன் புதிய மொபைல் சந்தாதாரர்கள் உருவாகி இருப்பதாக எரிக்ஸன் (Ericsson) நிறுவனம் தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாதங்களில் உலக அளவில் மொத்த மொபைல் சந்தாதாரகளின் எண்ணிக்கை 7.2 பில்லியனாக அதிகரித்திருப்பதாகவும், அதில் 108 மில்லியன் புதிய சந்தாதாரர்கள் என்றும் எரிக்ஸன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொபைல், முக்கியமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இங்கு மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும்,  இந்தியாவைத் தொடர்ந்து சீனாவில் எட்டு மில்லியன் புதிய சந்தாதாரர்களும், மியான்மரில் ஐந்து மில்லியன் சந்தாதாரர்களும் அதிகரித்திருக்கிறார்கள். இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் வளர்ச்சி தலா நான்கு மில்லியனாக காணப்படுகிறது என்றும் அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ