Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவின் பிகாம் நிறுவனம்: 3 ஆண்டுகளில் 10 கோடி டாலர் முதலீடு!

சீனாவின் மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான பிகாம் (Phicomm)  இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 10 கோடி டாலைரை ரிஸர்ச் அண்ட் டெவலெப்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.

சமீபத்தில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி, பிறகு பேசிய சிஇஓ மின் ஜெங், "எங்களின் இலக்கு  இந்திய இளைஞர்கள்தான், அவர்களை இலக்காக வைத்து புதுவிதமான மொபைல்களை அறிமுகப்படுத்தி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய மொபைல் சந்தையில் ஐந்து சதவிகித வளர்ச்சியை அடைவதே எங்களின் நோக்கம்" என்று  தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடப்பு ஆண்டிலேயே இந்த நிறுவனம் இந்தியாவில் 200-300 டாலர் மதிப்புள்ள மொபைல்கள் சிலவற்றை வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP