Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விப்ரோ, டிசிஎஸ் நிறுவனங்களில் சம்பள உயர்வு!

நடப்பு ஆண்டின் ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு 8-10% வரை சம்பள உயர்வை வழங்கும் என்று மனிதவள மேலாண்மை நிபுணர்கள் கணித்திருந்தார்கள். மேலும் அவர்கள் டாப் பணியாளர்களுக்கு இரண்டு இலக்க சம்பள உயர்வு இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அதுபோலவே, இந்தியாவின் மிக முக்கிய சாஃப்ட்வேர் நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ, தனது கடல் கடந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு சராசரியாக ஏழு சதவிகித சம்பள உயர்வையும், ஆன்சைட் பணியாளர்களுக்கு இரண்டு சதவிகித சம்பள உயர்வையும் வழங்கியிருக்கிறது. மேலும் வேலையின் டாப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அதிகரித்திருப்பதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் போட்டி நிறுவனங்களுL ஒன்றான டிசிஎஸ் நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு எட்டு சதவிகித சம்பள உயர்வை வழங்கி இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ