Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிஜிட்டல் மையமாகும் ஐடி துறை!

தற்போது எல்லாமே டிஜிட்டல்தான் என்கிற  நிலையில், அனைத்து தொழில்துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களை டிஜிட்டல்மையமாக்கி வருகிறார்கள். அதன் மூலம் அவர்களின் வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இந்தியாவின் பிரபல ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மகேந்திரா, அவர்களின் பணியை டிஜிட்டல் மையமாக்கியுள்ளதால் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள்  3,100 கோடி ரூபாய் டிஜிட்டல் வருமானத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.


தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவில் மட்டும் 2,500 பேர் வேலை செய்து வருகிறார்கள். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை  ஒரு லட்சமாக காணப்படுகிறது.

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் ஐடி துறையில் மொத்த டிஜிட்டல் வருமானம் 12-14% என்றும், நடப்பு நிதி ஆண்டில் இது மேலும் உயரும் என்றும் மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்கள் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ