Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் அதிவேக ரயில் புறப்பட தயார்

டெல்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையிலான அதி வேக ரயிலான காடிமான் எக்ஸ்பிரஸின் ஆறாவது மற்றும் இறுதியான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. மணிக்கு அதிகபட்சம் 160 கி,மீ வேகத்த்தில் செல்லக்கூடிய இந்த ரயில் கடைசி சோதனை ஓட்டத்தில் டெல்லிக்கு ஆக்ராவிற்கும் இடையிலான 195 கி.மீ தூரத்தை 115 நிமிடங்களில் சென்றடைந்தது .

       195 கி.மீ தொலைவை 105 நிமிடங்களில் அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட காடிமான் எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள் தாமதமாகத்தான் இலக்கை அடைந்தது குறிப்பிடத்தக்கது.வடக்கு ரயில்வே பராமரிப்புத் துறை இச்சோதனை ஓட்டத்தை நிகழ்த்தியது 


       ஜூன் இரண்டாம் வாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரா மோடி கொடி அசைத்து இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லக்கூடிய காடிமான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவங்கிவைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


        காடி மான் எக்ஸ்பிரஸ்  தினமும் காலையில் 8 மணிக்கு புது டெல்லியிலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு ஆக்ராவிற்கு சென்றடையும் என்றும், ஆக்ராவிலிருந்து  மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு புது டெல்லியை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ