Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்....!

3.30 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.06.2015) காலையில் இறக்கத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது.   மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 44.93 புள்ளிகள் குறைந்து 26,768.49 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 15.95 புள்ளிகள் குறைந்து 8,114.70 என்ற நிலையில் வர்த்தகமானது.


சென்செக்ஸில் 1,378 பங்குகள் ஏற்றத்திலும், 1,298 பங்குகள் இறக்கத்திலும்,159 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 751 பங்குகள் ஏற்றத்திலும், 656 பங்குகள் இறக்கத்திலும்,58 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. தொலை தொடர்பு மற்றும் பொழுது போக்கு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.


விலை அதிகரித்த பங்குகள்
ஜீ என்டர்டெயின் ( 3.46 %)
கோல் இந்தியா ( 4.32 %)
கெயில் ( 3.21% )
ஐடியா செல்லுலார் (2.76%)
என் எம் டி சி ( 2.34 %)

விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் (-3.14%)
ஏசிசி (-2.21%)
அல்ட்ரா டெக் சிமென்ட் (-2.15%)
ஐசிஐசிஐ பேங்க் (-2.07%)
டாடா மோட்டர்ஸ் (-2.02%)

 

2.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.06.2015) மதியம் 2.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 132.78 புள்ளிகள் அதிகரித்து 26,946.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38.00 புள்ளிகள் அதிகரித்து 8,168.65 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.16 % குறைந்து 26,796 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.14 % குறைந்து 37,120 ரூபாயாக உள்ளது.


கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 1.08 % குறைந்து 3,680 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.20% குறைந்து 63.87 ரூபாயாக உள்ளது


விலை அதிகரித்த பங்குகள்
கோல் இந்தியா ( 4.83%)
சன் பார்மா ( 3.07 %)
என் டி பி சி (2.67 % )
கெயில் (3.53 %)
ஜீ என்டர்டெயின் (3.29%)

விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் (-2.51% )
ஏசிசி ( -2.04%)
ஐசிஐசிஐ பேங்க் (-1.40%)
ஆக்சிஸ் பேங்க் ( -0.67%)
டாடா மோட்டர்ஸ் (-1.36%)

 

 

12.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(05.06.2015) மதியம் 12.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 127.80 புள்ளிகள் அதிகரித்து 26,941.22 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 33.65 புள்ளிகள் அதிகரித்து 8,164.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.06 % குறைந்து 26,821 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.11 % குறைந்து 37,130 ரூபாயாக உள்ளது. 

கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.78 % குறைந்து 3,691 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.45 % அதிகரித்து 64.18 ரூபாயாக உள்ளது.


விலை அதிகரித்த பங்குகள்
கோல் இந்தியா ( 4.61%)
சன் பார்மா ( 2.98 %)
ஐடியா செல்லுலார் (2.76% )
கெயில் (2.63 %)
என் எம் டி சி (2.43 %)

விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமென்ட்ஸ் (-2.16% )
ஏசிசி ( -2.12%)
டிசிஎஸ் (-0.87%)
ஆக்சிஸ் பேங்க் ( -0.61%)
டாடா மோட்டர்ஸ் (-1.78%)

11.00 மணி நிலவரம்

இன்று காலை இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. காலை 10.30 மணி அளவில் தேசிய சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 8118.40 என்கிற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 31 புள்ளிகள் குறைந்து 26,775.46 என்கிற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அதே போல முக்கிய சர்வதேச சந்தைகளான நிக்கி 31 புள்ளிகள் குறைந்தும், நாஸ்டாக் 40 புள்ளிகள் குறைந்தும், ஹேங் சங் 176 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

பத்து கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 22 ரூபாய் அதிகரித்து 26,860 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி 12 ரூபாய் குறைந்து 37,160 ரூபாய் என்கிற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 63.94 ரூபாயாக வர்த்தகமாகிறது. அதே போல ரூபாய்க்கு நிகரான யூரோ மற்றும் பவுண்டு முறையே 71.74 மற்றும் 98.21 ரூபாய் என்கிற நிலையில் வர்த்தகமாகி வருகின்றன.

தற்போதைய நிலையில் கேப்பிட்டல் கூட்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் ஏற்றத்திலும், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ