Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 118% வேலைகள் அதிகரிப்பு!

மத்தியில் ஆளும் நரேந்திரமோடி அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா மற்றும் ஸ்கில் இந்தியா திட்டங்களின் மூலம் கடந்த 2014-ம் ஆண்டின்  ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 118% வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தொழிலாளர் அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த அறிக்கையில் எட்டு முக்ககிய தொழில்துறைகளில் 2.75 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகவும், இது இதற்கு முந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.26 லட்சம் வேலைகள் உருவாகியிருப்பதும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அமைச்சகம் ரெடிமேட், லெதர், மெட்டல், ஆட்டோமொபைல், ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி, போக்குவரத்து, ஐடி/பிபிஓ மற்றும் கைத்தறி/விசைத்தறி என மிக முக்கியமான எட்டு துறைகளில் இந்த ஆய்வறிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் ஐடி/பிபிஓ துறை 89,000 புதிய வேலைகளையும், டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் 79,000 வேலைகளையும் மற்றும் லெதர் துறை 1,000 புதிய வேலைகளையும் உருவாக்கியுள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 மில்லியன் இளைஞர்கள் வேலைகளுக்காக தயாராகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ