Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாபகரமான ஃபண்ட் ஹவுஸ்: ஹெச்டிஎப்சி மியூச்சுவல் ஃபண்ட் முதலிடம்!

ஆம்ஃபி அமைப்பு சமீபத்தில் மிகவும் லாபகரமான மியூச்சுவல் ஃபஸ்ட் ஹவுஸ் பட்டியலை வெளியிட்டது. இதில் 416 கோடி லாபத்துடன் (வரிக்கு பிந்தைய வருமானம்) ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் முதலிடத்தில் இருக்கிறது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் 357 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சொத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இந்த பட்டியலில் 247 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் 123 கோடி ரூபாயுடன் பிர்லா சன்லைஃப் நிறுவனம் இடம்பிடித்திருக்கிறது.

இந்த ஃபண்டுகளின் நிர்வகித்துவரும் சொத்து மதிப்புகளை பார்த்தால் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் 1.46 லட்சம் கோடி, ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் 1.32 லட்சம் கோடி, ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் 1.24 லட்சம் கோடி மற்றும் பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் 1.07 லட்சம் கோடியாக காணப்படுகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ