Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய நிறுவனங்கள் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் நிதி திரட்டியது

  ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகள் மூலம் ரூ. 1.05 லட்சம் கோடியை இந்திய நிறுவனங்கள் திரட்டி இருக்கின்றன. பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்ததால் கடன் சந்தை மூலமே இந்திய நிறுவனங்கள் அதிக நிதியை திரட்டி இருக்கின்றன. அதாவது, ரூ. 85,136 கோடியை கடன் சந்தையிலும் மீதி ரூ. 20,400 கோடியை பங்குச் சந்தை மூலமும் திரட்டி இருக்கின்றன. 
 
       பங்குச் சந்தை என்கிற போது, முன்னுரிமை பங்குகள் வெளியீடு (ரூ. 10, 484 கோடி), உரிமைப் பங்கு வெளியீடு (ரூ. 7,498 கோடி), புதிய பங்கு வெளியீடு (ரூ. 1.392 கோடி), நிறுவனங்களுக்கு நிதி தனிப்பட்ட ஒதுக்கீடு (ரூ. 1,032 கோடி) மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது.  இந்தத் தொகை பெரும்பாலும் விரிவாக்கத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட இருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ