Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு: ரூ.15 கோடி!

பங்குச்சந்தை ஜாம்பவான் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு  சாப்பிட கிளைட் அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாக ஏலத்தை நடத்தி வருகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை சமூக நலத்திட்டங்களுக்காக செலவிடப்படுகிறது. சமீபத்தில் 16-வது முறையாக நடந்த ஏலத்தில் மொத்தம் 76 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் சீனாவின் ஆன்லைன் விளையாட்டுக்களை உருவாக்கும் ஜீயஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ஸு யி வாரன் பஃபெட்டுடன் மதிய உணவை சாப்பிடுவதற்காக 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார்.

இந்த மதிய உணவிற்கு ஏலம் எடுத்திருப்பவர் தன்னுடன் ஏழு நண்பர்களை அழைத்து வரலாம். அவருடன் மதிய உணவு உட்கொள்ளும் போது அவரது வாழ்க்கை குறித்தும், நன்கொடை சம்மந்தபட்ட விஷயங்கள் என அனைத்தையும் கலந்துரையாடலாம். ஆனால் அவர் முதலீடு செய்யும் பங்குகள் குறித்து மட்டும் பேசக் கூடாது என கிளைட் அறக்கட்டளை நியதியை வகுத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ