Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு!

மத்திய நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) உள்ள பணத்திலிருந்து 5% தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

பி.எஃப் தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், முதல்கட்டமாக நடப்பு மாதத்தில் ஒரு சதவிகித தொகையை முதலீடு செய்யப் போவதாகவும், அதன் பிற்கு நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் ஐந்து சதவிகித தொகையும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கவனமாகமுதலீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ