Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட்

 வளமான வாழ்க்கை - முதலீட்டாளர்களுக்கு இந்த மூன்றும்  மிக முக்கியம்..!
வளமான வாழ்க்கை - முதலீட்டாளர்களுக்கு இந்த மூன்றும் மிக முக்கியம்..!

முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ‘‘நாளுக்கு நாள் நம்முடைய வாழ்க்கைமுறை மாறிவருகிறது; செலவுகள் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் நம்முடைய தேவைகள் பலமடங்கு அதிகரிக்கலாம். அவற்றைச் சமாளிக்க நம்மிடம் போதுமான அளவு பணம் இருக்கவேண்டுமல்லவா? நிதிச்சுமை இல்லாத வாழ்க்கையை நடத்த `நாளைக்கான இன்றைய முதலீடு' என்பது மிகவும் அவசியம். தங்கமும் ரியல் எஸ்டேட்டும் வருமானம் தரும் நிலையில் தற்போது இல்லை. நம்முடைய முதலீட்டில் அதிக லாபம் பெற சிறந்த வழி மியூச்சுவல் ஃபண்ட். இதில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம், வரிச்சலுகையுடன் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்" என்று பேசினார்.

பொது

சுதந்திரமும் இந்திய வர்த்தகமும்!!
சுதந்திரமும் இந்திய வர்த்தகமும்!!

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு காரணம் வியாபாரம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? இல்லை என்று நீங்கள் மறுத்தாலும் நம்பி தான் ஆகவேண்டும். கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்று இந்தியாவுக்குள் வியாபாரம் செய்ய வரவில்லை என்றால் இந்திய அடிமைபட்டிருக்காது. அப்படி அடிமை படாவிட்டால் இந்தியா சுதந்திர நாடாகவே இருந்திருக்கும். இன்று நாம் இந்தியாவை ஐடி துறையின் மையமாக விளங்குகிறது என்கிறோம். சுதந்திரத்திற்கு முன்பு அனைத்து இயறகை வளங்களுக்கும் இந்தியா ஹப்பாக விளங்கியுள்ளது. வெளிநாட்டு வியாபாரிகளுக்கு தெரிந்த இதனை அவர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். இன்று நாம் மேலாண்மை படிப்பில் பயிலும் ''கஸ்டமர் சேட்டிஸ்ஃபேக்‌ஷன்'' ''மார்க்கெட் ட்ரெண்ட்'' ''ஃபர்ஸ்ட் மூவர் அட்வான்டேஜ்'' ''மோனோபோலி'' போன்ற விஷயங்களை இந்திய வாடிக்கையாளர்களிடம் அன்றே நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறது கிழக்கிந்திய கம்பெணி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close