வாழ்க வளமுடன்! உடலுக்குச் செய்வோம் மசாஜ் தாத்தாக்களுக்கும் பேரன்களுக்கும் உறவின் அடர்த்தியும் அன்பின் நேர்த்தியும் மிக அதிகம். பேரன் அல்லது பேத்தியை அழைத்துச் செல்கிற தாத்தாவோ, தாத்தாவை கைப்பிடித்து அழைத்துச் செல்கிற பேரனோ பேத்தியோ... பார்ப்பதற்கே பரவசம் தருபவர்கள்; நம் பால்யத்தை சட்டென்று நினைவுக்குக் கொண்டு வருபவர்கள்! பால்யத்தில், நம் தாத்தாவுக்கும் நமக்குமான உறவை சட்டென்று யோசிக்கத் துவங்கிவிடுவோம். ''கண்ணு... தாத்தாவுக்கு காலெல்லாம் ஒரே வலி. கொஞ்சம் பிடிச்சு விடேன்'' என்று சொல்லாத தாத்தாக்களும் இருக்கிறார்களா என்ன? அப்படிச் சொல்லிவிட்டால், உடனே பேரப்பிள்ளைகள் குஷியும் கும்மாளமுமாக ஓடி வருவார்கள். வந்து கால் பிடித்துவிடுவார்கள். அந்தப் பிஞ்சுக்கைகள் முழங்காலில் இருந்து பாதம் வரை இப்படியும் அப்படியுமாகப் பயணித்து, மென்மையாக அமுக்கிவிடும். அதேபோல் சில குழந்தைகள், படுத்திருக்கும் தாத்தாவின் காலில் ஏறி நின்று, சுவர் பிடித்துக் கொள்வார்கள். தன் மெல்லிய கால்களால், சுவரைப் பிடித்தபடி, தாத்தாவின் கால்களில் முன்னும் பின்னுமாக நடந்து வருவார்கள். தாத்தா. . .
COMMENT(S): 9
"கைகளையே பேரனாக அல்லது பேத்தியாக நினைத்துக்கொண்டு" - நெகிழவைக்கும் வர்த்தைகள்..வாழ்க வளமுடன்!!

அருமையான சுலபமான மசாஜ் செய்முறைகள். நன்றீ அய்யா.
மிக மிக நன்றி.
Very useful. Will try this.