கதை கேளு... கதை கேளு...
கதை கேளு... கதை கேளு... மன்னார்குடியில், உத்ஸவரை உளமாரத் தரிசித்தனர் தாத்தாவும் பேரனும்! ''கண்ணா... மன்னார்குடி ஹரித்ரா நதிக்கரையில் கோப்பிரளயர், கோபிலர்னு இரண்டு முனிவர்களுக்கும் கிருஷ்ணாவதாரத்தின் 32 காட்சிகளையும் கண்ணபிரான் காட்டியருளினார் இல்லையா... அதுல 32-வது காட்சிதான் இந்த ராஜகோபால ஸ்வாமி திருமேனி. எத்தனை அழகா இருக்கார், பாரேன்!'' என்று பெருமிதத்துடன் தாத்தா சொல்ல... பேரனும் உத்ஸவரை உற்றுப் பார்த்து, 'ஆமாம் தாத்தா’ என்று சொல்லி ஆமோதித்தான். ''இங்கே இன்னொரு தனிச்சிறப்பு என்ன தெரியுமோ? பெருமாள் சந்நிதிக்கு முன்னாடி பலிபீடம், துவஜஸ்தம்பம்... அப்புறம் கருடாழ்வார் சந்நிதி இருக்கும். அதுமட்டுமில்லாம செங்கமலத் தாயார் சந்நிதிக்கு எதிர்ல, கருடனோட மனைவி சுபர்ணிக்கும் சந்நிதி இருக்கு. கருடனுக்கு சுபர்ணன்னு பேரு உண்டு. அவன் மனைவி பேரு, சுபர்ணி!'' என்று தாத்தா சொல்ல... விறுவிறுவென தாயார் சந்நிதிக்கு ஓடிப் போய்ப் பார்த்தான் பேரன். ''தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்துல, அசுரர்கள் தோத்துப் போனாங்க. இதுல கோபமான பிருகு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 1
பத்து வருஷம் ஹரித்ரா நதி கீழ்கரையிலேயே வாழ்ந்து அந்த ராஜகோபாலனை வழிபட்டது நினைவில் எப்போதும் நிற்கிறது. அந்த மஹாப் பெரிய குளத்தில் நடக்கும் தெப்போற்சவம் காணக்கண் கோடிவேண்டும்.