வாழ்க வளமுடன்! வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் ஒருவர் நற்பெயர் எடுப்பதற்கு இரண்டு விஷயங்கள் நன்றாக இருக்க வேண்டும். அவை... உடல் மற்றும் மனம்! உடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக இருந்து மனம் சோர்வுற்றாலோ அல்லது மனம் விழிப்பு உணர்வுடன் இருந்து உடல் சோர்வாக இருந்தாலோ, நமது செயல்பாடுகள் சிறப்பாக அமையாமல் போவதோடு, நற்பெயர் எடுப்பதும் கடினமாகிவிடும்! 'வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் - அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?’ என்று கவியரசு கண்ணதாசன் அழகாகச் சொல்லியிருப்பார் ஒரு பாடலில்! இது, இல்லற வாழ்க்கைக்கு மட்டுமின்றி, நம் தேக ஓட்டத்துக்கும் ரொம்பவே பொருந்தும். உடல் ஒரு சக்கரம்; மனம் ஒரு சக்கரம். இந்தச் சக்கரத்தின் அளவு மற்றும் செயல்பாடுகள் எதில் குறைந்தாலும், அது நிறைவு தராது; நிம்மதியைக் கொடுக்காது; சீராக இயங்கும் நிலையில் இருக்காது; சிறப்பு சேர்க்காது!. . .
COMMENT(S): 1
இந்த வார பயிற்சி சொல்லலையே.